×

மாற்றுத்திறனாளிகள் இலகுவாக வாக்களிக்க ஏற்பாடு 259 வாக்குச்சாவடிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள்

நெல்லை, மார்ச் 30: பாளையங்கோட்டை மாற்றுத்திறனாளிகள் பள்ளியில், நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 259 வாக்குச்சாவடி மையங்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான 259 மடக்கு சக்கர நாற்காலிகளை, அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து  வருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து  வாக்குச்சாவடி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் இடங்களை  கன்டறிந்து, 5க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்களிக்க தேவையான இடங்கள் என 259 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த 259 வாக்குச்சாவடி மையங்களுக்கும் 259 மடக்கு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஏப்.3ம் ேததிக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிவு பெற்று 259 வாக்குச்சாவடி மையங்களிலும் மடக்கு சக்கர நாற்காலிகள் இருப்பது உறுதி செய்யப்படும். மேலும் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாசல் மற்றும் வாக்குச்சாவடி அறையின் நுழைவு ஆகிய இடங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் அமர்ந்து எளிதில் வாக்களிக்கும் வகையில் போதுமான இடத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிறுவப்படும். இதற்காக குறைவான உயரத்திலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு  வாக்களிப்பது தொடர்பாக உதவி பெற 7598000251 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’’ என்றார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு