நயினார் நாகேந்திரன், ஜெரால்டை ஆதரித்து தச்சநல்லூரில் ஏப்.3ல் பாஜ பொதுக்கூட்டம்

நெல்லை, மார்ச் 30:  நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு ஆகியோரை ஆதரித்து தச்சநல்லூரில் ஏப்.3ம் தேதி நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். அதிமுக கூட்டணியில் நெல்லை சட்டமன்ற ெதாகுதி போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளை. தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் ஆகியோரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 3ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அன்று மதியம் 1 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் கல்லூரி மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் அவர், தச்சநல்லூரில் மாலை 3 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி தச்சநல்லூர் பைபாசில், பொதுக்கூட்ட பந்தலுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. பாஜ மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தயாசங்கர், மாநில பொறுப்பாளர் கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு நெல்லையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அன்பு தலைமையில் போலீஸ் அதிகாரிகள், ஓரிருநாளில் ஆலோசனை நடத்துகிறார். சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories:

>