டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வேலூர் மண்டல அலுவலகத்தில் போடப்பட்டது 116 மதுபான கடைகளில் பணியாற்றும்

வேலூர், மார்ச் 30: வேலூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு நாளை வேலூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினருக்கும் போடப்பட்டு வருகிறது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் மட்டும் 64 ஆயிரத்து 816 பேருக்கும், திருப்பத்தூரில் 30 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றும் சூப்பர்வைசர், விற்பனையாளர்கள் 695 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் வெறும் 400 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் வேலூர் காட்பாடி சாலையில் உள்ள மண்டல டாஸ்மாக் அலுவலக வளாகத்தில் நடந்தது. இவர்களுக்கு சுகாதாரத்துறையை சேர்ந்த அலுவலர்கள் தடுப்பூசி போட்டனர்.

Related Stories:

>