வேலூரில் இரவில் தூங்கி கொண்டு இருந்த பெண்ணிடம் நகை திருடியவர் கைது

வேலூர், மார்ச் 30: வேலூரில் இரவில் தூங்கி கொண்டு இருந்த பெண்ணிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கொசப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹேமாவதி(29). இவர் கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் குடும்பத்துடன் படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார். காலை எழுந்து பார்த்தபோது கழுத்தில் இருந்த இரண்டேமுக்கால் சவரன் செயின், ஸ்மார்ட் போன் போன்றவற்றை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோமவதி இதுகுறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த ராகுல் ராபட்(20) என்பவர் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories:

>