மணிகண்டம் தெற்கு ஒன்றிய பகுதியில் ரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 30: திருச்சி மாவட்டம் ரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று 13வது நாளாக மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அளுந்தூர், கோடங்கிப்பட்டி, குள்ளம்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, இனாம்குளத்தூர் பகுதி மக்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் இருக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி நீர்சேமித்து வைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார்.

பகுதியில் புதிய தொழிற்சாலை நிறுவ முயற்சிகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மாத்தூர் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகருப்பன், பாஜக ரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கள்ளிக்குடி ராஜேந்திரன், பெரியசாமி, மகேஷ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழழகன், மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் நல்லுசாமி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>