×

தி.பூண்டியில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 30: திருத்துறைப்பூண்டி தொகுதியில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 336 வாக்குச்சாவடிகளுக்கு 397 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கட்சி சின்னம் கொண்ட 397 இயந்திரங்களும் வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்கள் என கண்டறியும் கருவி 417 திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான கீதா மற்றும் உதவி தேர்தல் அலுவலர் ஜெகதீசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் கண்காணிப்பில் பாதுகாப்பு அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர். 24 மணி நேரமும் துணை ராணுத்தினர் மற்றும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Tags : T. Poondi ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ