முத்துப்பேட்டை அருகே சாலையோரம் குப்பைகள் எரிப்பு: புகையால் விபத்து அபாயம்

முத்துப்பேட்டை, மார்ச்30: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுப்பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு வந்து கொட்டப்படுகிறது. இதில் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் புகை பரவி எதிரே வரும் வாகனங்கள் தெரியாதளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பையில் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் இந்த சாலையில் காலை முதல் இரவு வரையில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகனங்கள் நிறுத்தி வேகம் குறைவாக சென்றது. சில வாகனங்கள் அதிகளவில் வேகத்துடன் சென்றதால் விபத்துக்கள் நடக்கும் சூழ்நிலை உருவாகியது. மேலும் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் வித்துஇப்படி அடிக்கடி இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும். இல்லையேல் நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More