கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா உறுதி

மன்னார்குடி, மார்ச் 30: மன்னார்குடி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா மூவர்கோட்டை ஊராட்சியில் இருந்து தனது 10ம் நாள் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, நீடா தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளவராயன் குடிக்காடு, அய்யம்பேட்டை, முன்னாவல்கோட்டை, செட்டிசத்திரம், மன்னை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட மகாதேவப்பட்டிணம், உள்ளிக்கோட்டை 7 ஊராட்சிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் டிஆர்பி ராஜா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்திட அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருமாறு வேண்டுகோள்விடுத்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் டிஆர்பி ராஜா பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அய்யம்பேட்டை ஏரி உள்பட தொகுதி முழுவதும் உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி ஒன்றொடு ஒன்று இணைக்கப்படும்.

மகாதேவப்பட்டிணம்-கருவாக்குறிச்சி இடையே பாலம் அமைத்து தரப்படும். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மகாதேவப்பட்டிணம் ெசம்பாதேவி, வராக பெருமாள் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டித் தரப்படும். எனவே, தமிழகத்தை சூழ்ந்துள்ள காரிருள்ள நீக்கி உதயசூரியன் உதித்திட, தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மலர்ந்திட அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். பிரசாரத்தின்போது, தேர்தல் பணிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன், மன்னை மேற்கு ஒன்றிய செயலாளர் மேலவாசல் தன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பைங்காநாடு ஞானசேகரன் உள்ளிட்ட திமுக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>