தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சை, மார்ச் 30: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 72 பறக்கும் படை குழுக்களும், 72 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தேர்தல் நாள் மிக நெருங்கி வரும் காரணத்தால் இக்குழுக்கள் துரிதமாக செயல்படுவது குறித்து குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கண்காணிப்பு பணியில் மெத்தனமாக செயல்படும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். எனவே கண்காணிப்பு பணியை குழுவினர் முறையாக மேற்கொண்டு ஏதேனும் பொருள், பணம் பிடிபட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தினார். ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமீனாட்சி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>