கலெக்டரிடம் மனு தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு

தஞ்சை, மார்ச் 30: வரும் ஏப்.6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வாக்களிக்க இம்முறை புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

இதன்படி வாக்காளர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தபால் வாக்களிக்க வரப்பெற்ற மனுக்கள் அடிப்படையில் அவர்களுக்கு தபால் வாக்குகளை அவர்களது இருப்பிடங்களிலேயே இருந்து வாக்களிக்க ஏதுவாக ஒரு காவலர், ஒரு நுண்பார்வையாளர் மற்றும் ஒரு வீடியோகிராபர் உள்ளடக்கிய மண்டல அலுவலர் குழுக்கள் தொகுதி வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து வந்துள்ள அறிக்கைகளின்படி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தபால் வாக்கு சீட்டு படிவம் 12டி எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மண்டல அலுவலர் குழுக்கள் மூலமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகம் செய்து மேற்படி வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் நடைமுறை வரும் 31ம் தேதி மற்றும் ஏப்.1ம் தேதிகளில் அந்தந்த தொகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>