பொதுமக்கள் வலியுறுத்தல் பேராவூரணியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதி

பேராவூரணி, மார்ச் 30: பேராவூரணியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்காளர்களிடம் வாக்குறுதி அளித்தார். பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக திரண்டு எங்கள் வாக்கு உதயசூரியனுக்குதான், உங்களது வெற்றி உறுதிசெய்யப்பட்டது என சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துகின்றனர்.

அப்போது கூட்டத்தினரிடையே அசோக்குமார் பேசியது, செல்லுகின்ற இடங்களில் எல்லாம் நீங்கள் அளிக்கின்ற வரவேற்பும், உற்சாகமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் வெற்றிபெற்றால் உ,ங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுவேன். பேராவூரணி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிமை அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. மத்திய பாஜக அரசு அதிமுகவை மிரட்டி தமிழகத்தில் கால் ஊண்டிவிடலாம் என கனவு காண்கிறது. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்காமல் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்க அதிமுக, பாஜக கூட்டனியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இது பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண் என்பதை அவர்களுக்கு உனரச்செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்யவேண்டும் என்று பேசினார். வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி தெற்கு, அன்பழகன், வடக்கு இளங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு முத்துமாணிக்கம், வடக்கு ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்நம்பி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல்மஜீத் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

>