திருமயம் வேட்பாளர் ரகுபதி பிரசாரம் ஏழை குடும்பங்களின் வாழ்க்கை தரம் உயர திமுகவுக்கு வாக்களியுங்கள் ஆலங்குடி வேட்பாளர் மெய்யநாதன் பிரசாரம்

அறந்தாங்கி, மார்ச்.30: ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் எம்எல்ஏ மெய்யநாதன் திருவரங்குளம் ஒன்றியம் சேந்தன்குடி, நகரம், ஆலங்காடு, கீழாத்தூர், வெள்ளாகுளம், செரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் மெய்யநாதன் பேசுகையில், எதிர்க்கட்சியாக இருந்த போதும் இப்பகுதி முழுவதும் நேரடியாக பார்வையிட்டு பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த மு.க ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் . எனவே ஏழை குடும்பங்களில் வாழ்க்கை தரம் முன்னேற உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர் ஞான.இளங்கோவன், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கியை அடுத்த பாண்டிக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்வீந்தர்சிங் பிரசாரம் செய்தார். இந்த நிகழ்வின் போது அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், திமுக நிர்வாகிகள் செழியன், நல்ல கூத்தன், மணிமொழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>