×

தேர்தல் அலுவலர் தகவல் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணி

பெரம்பலூர்,மார்ச் 30: பெரம்பலூர்(தனி), குன்னம் சட்ட மன்றத்தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய தாள் பொருத்தும் பணிகள் தொடங்கியது. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் (யானை), தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் குணசேகரன் (கடிகாரம்), அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் (இரட்டைஇலை), திமுக வேட்பாளர் பிரபாகரன் (உதயசூரியன்), தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன் (முரசு), ஐஜேகே கூட்டணி வேட்பாளர் சசிக்கலா (ஆட்டோ ரிக்சா), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி (கரும்பு விவசாயி), புதிய தமிழகம் வேட்பாளர் ராதிகா (தொலைக்காட்சி பெட்டி), சுயேட்சை வேட்பாளர் சதீஸ் (தொப்பி) ஆகிய 9 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை அடங்கிய தாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும்பணிகள், நேற்று பெரம்பலூர் சப்.கலெக் டர் அலுவலகத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜா முன்னிலையில் நடைபெற்றது.

முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் சின்னதுரை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் (இரட்டைஇலை), திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் (உதயசூரியன்), பகுஜன் சமாஜ் கட்சிசார்பாக பாண்டியன்(யானை), நாம்தமிழர் வேட்பாளர் அருள் (கரும்பு விவசாயி), நியூ ஜெனரேசன்ஸ் பீப்பிள்ஸ் பார்ட்டி வேட்பாளர் ராவணன் (பானை), அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் (பிரஷர் குக்கர்), மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சாதிக் பாட்ஷா (மின்கள விளக்கு) உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் 22 பெயர்கள், சின்னங்கள் ஆகியவை அடங்கிய தாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள், நேற்று குன்னம் தாலுகா அலுவலகத்தில், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் கிருஷ்ணராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான செந்துறை, ஆலத்தூர் தாசில்தார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Perambalur, Kunnam Assembly ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...