×

கொள்ளிடம் அருகே விஜய் மக்கள் இயக்க பேனர் கிழிப்பு

மயிலாடுதுறை, மார்ச் 30: கொள்ளிடம் அருகே விஜய் மக்கள் இயக்க பேனர் கிழிக்கப்பட்டு, அதே இடத்தில் அதிமுகவினர் விளம்பர பேனர் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே காட்டூர் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெயர் பலகை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென விஜய் ரசிகர் மன்ற பேனர் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக அதிமுக சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகளிடம் நியாயம் கேட்டனர். அதற்கு, அவர்களை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இச்சம்பவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று விஜய் ரசிகர் மன்ற பேனர் அகற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அகற்றப்பட்டு அதே இடத்தில் பக்கத்தில் மீண்டும் விஜய் ரசிகர் மன்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அதிமுகவினரின் இந்த சம்பவத்தால் கிராமத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kollidam ,
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...