ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

தரங்கம்பாடி, மார்ச் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. 8ம் தேதி சப்பரம் வீதியுலாவும், 11ம் தேதி தேர் திருவிழாவும், 16ம் தேதி தெப்பம், 18ம் தேதி உதிரவாய் துடைப்பு உற்சவமும், 25ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 30ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை, மே 2ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.

Related Stories:

>