×

அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி தேர்தல் பரப்புரைக்கு இன்று தாராபுரம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

கரூர், மார்ச். 30: தேர்தல் பரப்புரைக்காக தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று காலை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினர். பின்னர், அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளதாவது:அந்த மனுவில், ஆளுநரை வைத்து, தொடர்ந்து ஏழு தமிழர் விடுதலைக்கு தடை போட்டு வருவது. கூடங்குளத்தில் மேலும் அணு உலைகள் கட்டுவது. வேளாண் சட்டங்கள் மற்றும் புதிய மின்சார சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய முயற்சிப்பது.

நீட் தேர்வு மருத்துவத்துக்கு மட்டுமின்றி, நர்சிங், சட்டம், பொறியியல் உட்பட அனைத்துக்கும் நீட் தேர்வு வைக்க முயற்சிப்பது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கர்நாடக பாஜக அரசுக்கு மறைமுகமாக துணை இருந்து காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிப்பது. வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து, டெல்லியில் 120 நாட்களுக்கு மேல் போராடி வரும் விவசாயிகளிடையே டெல்லி காவல்துறையை வைத்து தொடர்ந்து கலவரம் ஏற்படுத்தி, போராட்டத்தை சிதைக்க முயற்சிப்பது என்பன போன்ற தொடர்ந்து தமிழக உரிமையை பறிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மக்கள் விரோத மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Environmental Protection Movement ,Tarapur ,Minister ,Vijayabaskar ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...