×

வேலூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை தொடங்குகிறது

வேலூர், மார்ச் 29: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டபேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதுவரை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசாரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 தொகுதிகளில் 1783 வாக்குச்சாவடி உள்ளன. 5 தொகுதிகளில் 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் பெயர்கள், சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்கான பேப்பர்கள் சென்னையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 41,850 பேலட் பேப்பர்கள் நேற்று மாலை வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 5 தாலுகா அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தொடர்ந்து நாளை தாலுகா அலுவலகங்களில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கப்படுகிறது. இப்பணிகள் முடிந்து வரும் 5ம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vallur ,
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்