×

திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் விழித்திரை சிறப்பு நிலையமான திருச்சி கண் மருத்துவமனை திறப்பு

திருச்சி, மார்ச் 29: திருச்சி- கரூர் பைபாஸ் ரோடு கலைஞர் அறிவாலயம் அருகில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய விழித்திரை சிறப்பு நிலையமான திருச்சி கண் மருத்துவமனையை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (திருச்சி கிளை) தலைவரும், டாக்டருமான கண்ணம்மை மனோகரன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (திருச்சி) செயலாளரும், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (தமிழ்நாடு) இணை செயலாளர் சேதுராமன், முன்னாள் தலைவரும், மருத்துவருமான குணசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மருத்துவமனையில் விழித்திரை நோய் சிகிச்சை, நுண்துளை கண்புரை அறுவை சிகிச்சை, கருவிழிநோய் சிகிச்சை, கண் அழுத்த நோய் சிகிச்சை, குழந்தைகள் கண் பரிசோதனை, கண் இமை சீரமைப்பு சிகிச்சை மற்றும் கண் நரம்பியல் சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. விழாவில் கேப்டனும், பேராசிரியருமான லோகநாதன், மருத்துவர்கள் ராஜாமோகன், சத்யா ஆல்பர்ட், நரசிம்மராவ், இன்ஜினியர் ராஜேந்திரன், கீதா ராஜேந்திரன், இன்ஜினியர் செல்வராஜ், முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான சரவணன் செல்வராஜ், அவரது தந்தை, தாய் செல்வராஜ்- வெள்ளயபிள்ளை, ஜெயலட்சுமி செல்வராஜ் மற்றும் துஷித்தா சரவணன், சுமதி கனகசேகர், டாக்டர் கனகசேகர், சுந்தரலிங்கம், விஜயகுமாரி வரவேற்றனர்.

Tags : Trichy-Karur ,Bypass Road ,Trichy Eye Hospital ,
× RELATED காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் வேன் கவிழ்ந்து 16பேர் காயம்