×

அமைச்சர் காமராஜ் பெருமிதம் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசன நிகழ்ச்சி திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்

மன்னார்குடி, மார்ச் 29: தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைத் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே, வங்கி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கை தனியார்மயத்திற்கு எதிராக மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறது. மேலும், 83 மாநில பொதுத்துறை நிறுவனங்களையும் சீரமைத்து அவற்றை இழப்பிலிருந்து மீட்டெடுத்து 3 லட்சம் ஊழியர்களை பாதுகாப்போம் என்றும் சீரமைக்க ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.

சத்துணவு ஊழியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் தொகுப்பு ஊதியத்தில் இருந்து “சிறப்பு காலமுறை ஊதியத்திற்கு” மாற்றப்பட்டாலும் அரசு ஊழியருக்கான காலமுறை ஊதியமாக அது நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் 43 ஆயிரம் மையங்களில் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் 49 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர், அமைப்பாளர், சமையல்காரர், உதவியாளர்கள் பொறுப்புகளில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு துவக்க நிலை ஊதியம் முறையே ரூ.3 ஆயிரம், ரூ.4,500, ரூ.7,700 மட்டுமே. மாநில அரசின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 கிடைப்பதில்லை. மேலும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியம்.

அரசு ஊழியர்கள்போல் ரூ.7,850 கிடைப்பதில்லை. 54 ஆயிரம் மையங்களில், 32 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் கல்வி வழங்கும் ஒரு லட்சத்து 4 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இதே நிலைதான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 20 ஆயிரம் ஆசிரியர்கள் வெறும் ரூ.8 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நிலையும் இதேதான். இவர்கள் அனைவரின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. மேலும் போராட்டங்களில் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்கிறது.

அரசுத் துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் பத்தாண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய பரிசீலனை என திமுக தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது. பரிசீலிக்கும் பட்சத்தில் மின்வாரியத்தில் மட்டும் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாவார்கள். மாநில அரசின் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பும் முடிவு, நீர் நிலை பாதுகாப்பில் 75 ஆயிரம், சாலை பாலம் பாதுகாப்பில் 75 ஆயிரம், அறநிலைய பாதுகாப்பில் 25 ஆயிரம், மக்கள் நலப்பணியாளர்கள் 25 ஆயிரம் என உருவாக்கப்படும். இந்த வேலை வாய்ப்புகள் சேர்த்து மொத்தம் ஐந்தரை லட்சம் தமிழக இளைஞர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் வேலை கிடைக்கும். இவற்றைப் பற்றி எல்லாம் அதிமுக தேர்தல் அறிக்கையில் வாய் திறக்கவில்லை.

அரசுத்துறைகள், ஊழியர்கள், அனைத்து பிரிவு தொழிலாளர்கள் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதன் கூட்டனி வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்வது உழைக்கும் மக்களின் உறுதிமொழியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Kamaraj Pride ,Thiruvarur ,Thiyagaraja Swamy Temple ,DMK ,Tamil Nadu ,
× RELATED போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ,...