×

ஏராளமான கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சிதலமடைந்த கோயில்களுக்கு திருப்பணி செய்ய ரூ.5 லட்சம் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை, மார்ச் 29: பட்டுக்கோட்டை மங்கள விநாயகர் கோயிலில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை ஒன்றிய பூசாரி பேரவை அமைப்பாளர் ராமையன் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய அருள்வாக்கு பேரவை அமைப்பாளர் செல்லத்துரை வரவேற்றார். கூட்டத்தில், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் அனைத்து பூசாரிகளையும் இணைத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வந்து பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூசாரிகள் மற்றும் இந்து சமய மக்கள் இந்தியாவில் உள்ள புனித ஆலயங்களுக்கு புனித யாத்திரை சென்றுவர அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.

சிதலமடைந்த கிராமக் கோயில்களுக்கு திருப்பணி செய்ய ரூ.5 லட்சம் அரசு நிதி உதவி வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த பூசாரிகளுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் அறிவித்ததுபோல் நலவாரியத்தில் உள்ள கிராமக்கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை 10 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத பூசாரிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Christians ,
× RELATED மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி