புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக 127 வழக்கு பதிவு

புதுக்கோட்டை, மார்ச் 29: புதமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைக அமலுக்கு வர தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் பறக்கும் படைகள், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உரிய ஆவனங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறப்பு பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து சென்றதாக வழக்குகளும், உரிய அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல் உள்ளிட்ட குற்றத்திற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>