×

பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி

பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் நகரில் தங்கியுள்ள அனுக்கூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி திறந்து நடந்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்தில உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் ஒருவருக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு காரணம் அவரது கொரோனா தொற்று பாதித்த சகோதரருடன் நெருங்கி பழகியதால் இவருக்கும் தொற்றுபாதிப்பு வெளியே தெரியாதபடி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.கொரோனா தொற்ற என தெரிந்த பிறகும், 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளி திறக்கப்பட்டு நடந்து வந்ததால், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவின்பேரில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பின்னர் ஆசிரியர்கள் பலரது வலியுறுத்தலின் பேரில் திருச்சிக்கு சென்று உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பள்ளித் தலைமையாசிரியருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் எந்தவித அச்சமும் இன்றி அரசு மேல்நிலைப்பள்ளி திறந்து செயல்பட கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 9,10, 11வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நிறுத்தப்பட்டாலும், பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வைக் காரணம் காட்டி தடையின்றி வகுப்புகள் நடக்க வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக்கூறப்படுகிறது. இதனால் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது திருச்சி தனியார் கல்லூரியில் பயிலும் மாணவன் ஆகிய 2பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆசிரியர் பணிபுரியும் சித்தளி அரசு நடுநிலைப்பள்ளி, அவரது மனைவி பணிபுரி யும் சிறுகுடல் அரசுத் தொடக்கப்பள்ளி, ஆசிரியர் குடும்பம் வசிக்கும் எளம்பலூர் சாலை உப்போடை அருகேயுள்ள தெரு, தேர்தல் பயிற்சிபெற்ற மேலமாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் உடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பயிற்சியாளர் உள்பட 100 பேர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதோடு சித்தளி, சிறுகுடல் பள்ளிகள், காமராஜர் வளைவுப் பகுதியிலுள்ள ஆசிரியருக்கு சொந்தமான ஸ்டேசனரி மார்ட் ஆகியன மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Christians ,Kavadi ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்