×

திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் தேர்தல் செலவு கணக்குகளை காட்டாத 11 வேட்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் செலவின பார்வையாளர் உத்தரவு

பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக அரவிந்த் ஜி.தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து தேர்தல் செலவின பார்வையாளரால் 3 கட்டமாக ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவின விபரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணியில் ஒரு அங்கமாக வேட்பாளர் பராமரிக்க வேண்டிய தேர்தல் செலவினங்கள், வேட்பாளர் பராமரிக்கும் செலவின பதிவேடு, வவுச்சர் ரசீதுகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் செலவின பார்வையாளரால் தணிக்கை செய்யப்பட்டது.

தணிக்கைக்கு பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களில் 7 வேட்பாளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்களும் கணக்குகளை தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கணக்குகளுடன் ஆஜராகினர். வேட்பாளர்களின் கணக்குகளை தணிக்கை செய்த தேர்தல் செலவின பார்வையாளர் தேர்தல் செலவின கணக்குகளை பராமரிக்கும் முறை குறித்தும் ரொக்கமாக பணம் செலவு செய்வது தொடர்பாக அறிவுரை வழங்கினார். கணக்குகளை தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தாத 11 வேட்பாளர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பிட சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது