திரளான பக்தர்கள் தரிசனம் திட்டச்சேரி அருகே மாயமான மனைவியை மீட்டுத்தர கணவர் புகார்

நாகை, மார்ச் 29: திட்டச்சேரி அருகே காணாமல் போன மனைவி மீட்டுத்தர கோரி கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.திட்டச்சேரி அருகே பா.கொந்தை இந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார் (28). இவருக்கும் நாகை அருகே ஒக்கூர் பெரியநார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (24)க்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணவேணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே காணாமல் போன மனைவியை மீட்டுதரக்கோரி உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>