×

கொள்ளிடம் பகுதியில் வாக்காளர்களுக்கு பண சப்ளை படுஜோர் தடுத்து நிறுத்த திமுக வலியுறுத்தல்

கொள்ளிடம், மார்ச் 29: கொள்ளிடம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், தேர்தல் பறக்கும் படையினர் இதனை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தற்போது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பகுதியாக மாலை நேரங்களில் துவங்கி இரவு நேரங்களில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அதிமுக சார்பில் வேஷ்டி புடவைகள் வழங்கியும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு என்று அதிமுக கட்சியினர் சார்பில் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் தீவிரமாக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

ஒருதலைப்பட்சமாக அதிகாரிகள் அதிமுகவினருக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு வீட்டுக்கு ரூ.2,000 மற்றும் அந்த வீட்டிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். உதாரணமாக ஒரு வீட்டில் ஐந்து வாக்காளர்கள் இருந்தால் ரூ 10,000 மற்றும் 2000 சேர்த்து 12000 வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண் வாக்காளருக்கு ஒரு வேட்டி விதமும், பெண் வாக்காளருக்கு புடவை சேர்த்து வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் ஒருதலைப்பட்சமாக அதிகாரிகள் செயல்பட்டு ஆளுங்கட்சியினர் விதிமீறி எடுத்துச்சல்லும் புடவை மற்றும் தொகை ஆகியவைகளை கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் திருமணம் மற்றும் விழா சம்பந்தமாக எடுத்துச்சல்லும் பொருட்களை சோதனைக்கு ஆட்படுத்தி அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இது குறித்து உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினரும் திமுக ஒன்றிய பொறுப்பாளருமான அங்குதான் தெரிவித்தார்.

Tags : DMK ,Padujor ,Kollidam ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்