திரளான பக்தர்கள் பங்கேற்பு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை கோரி கழுகூர் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளனர்

தோகைமலை, மார்ச் 29: தோகைமலை அருகே கழுகூர் பொதுமக்கள் 2021 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக பேனர் வைத்து உள்ளனர். அந்த பேனரில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது: காணாமல் போகும் கழுகூரை மீட்டுக்கொடு, கழுகூர் பேருந்து நிறுத்தத்தை நெடுஞ்சாலைதுறை உறுதி படுத்தியும் தொடர்ந்து அதை கஸ்பா என்றே அவமானப்படுத்தும் போக்குவரத்து துறையை சரிசெய்ய வேண்டும், கழுகூருக்கான காவிரி குடிநீர் எங்கு செல்கிறது, கழுகூருக்கான நியாயவிலை கடையை கழுகூரில் அமைக்க வேண்டும்,

வாக்கு மையத்தின் இருப்பிடம் கழுகூர் என்றும் ஆனால் அங்கு மக்கள் வசிக்கும் இருப்பிடம் கஸ்பா என்றும் முரண்பட்டு இருப்பதை கழுகூர் என்று மாற்ற வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பாக கழுகூர் ஏரிக்கு வைக்கப்பட்டு உள்ள பெயர் பலகையை கழுகூர் சாலையில் வைக்க வேண்டும். ஊராட்சிக்கான இடம் கழுகூர் என்று இருந்தபோதும் அதற்கான அடையாளங்கள் மறைக்கப்பட்டு உள்ளதை மாற்றி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். முதலமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர், தாசில்தார், மாநில தேர்தல் ஆணையம், நெடுஞ்சாலைதுறை போன்ற அனைத்து துறைகளில் இருந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில்கள் வந்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள நிலையை மாற்றி கழுகூர் என்ற அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேனரில் தெரிவித்து உள்ளனர்.

Related Stories:

>