×

இன்று பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

நாகர்கோவில், மார்ச் 28 : பங்குனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரத்தன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். இதன்படி இன்று (28ம் தேதி) பங்குனி உத்திரம் ஆகும். இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தன்று  பௌர்ணமி என்பதால் கூடுதல் சிறப்பாகும். மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவதுதான் நல்ல பலனை பெற்றுத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். குல தெய்வ கோயில்களில் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு வழிபாடு செய்வார்கள்.

பங்குனி உத்திரத்தை யொட்டி இன்று ஏராள மானோர் குலதெய்வ கோயில்களில் தரிசனம் செய்வதற்கு ஏராளமான செல்வார்கள்.  குமரி மாவட்டத்திலும் குல தெய்வ கோவில்களில் வழிபாடுகள் செய்வார்கள். பெரும்பாலும் சாஸ்தா கோயில்கள் தான் குல தெய்வ கோயில்களாக அமைந்து இருக்கும். இதனால் சாஸ்தா கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கும். வழிபாடு முடிந்ததும் பக்தர்கள் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவார்கள். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வழிபாடு நடத்த வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Tags : Panguni ,Uttar ,Shasta temples ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...