×

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் சூறாவளி பிரசாரம்

தாராபுரம்,மார்ச்29: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் நேற்று உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பொது மக்களின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நகரில் பிரசாரத்தை துவங்கினார். தாரை,தப்பட்டைகள் முழங்க திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வர, திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் வீதி,வீதியாக நடந்து சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

தாராபுரம் நகர திமுக செயலாளர் தனசேகர் தலைமையில் பூக்கடை சந்திப்பு, வசந்தா சாலை, பொள்ளாச்சி சாலை, மத்திய பஸ் நிலைய பகுதிகளில் நேற்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்கள் மத்தியில் கூறி திமுகவுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்,தமிழ் நாட்டின் எதிர்காலம் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்க அவர் வாக்கு சேகரித்தார்.

Tags : Tarapura ,Divandal ,Kayalvini ,Satharaj ,Cyclone ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...