விண்ணப்பித்த 15 நாளில் குடிநீர் இணைப்பு திமுக தேர்தல் அறிக்கையை கூறி மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரிப்பு

வெள்ளக்கோவில்,மார்ச்29: காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெள்ளக்கோவில் நகரத்திற்கு உள்பட்ட, சொரியகிணத்துப் பாளையம் பிரிவு, ஸ்ரீராம் நகர், நடேசன் நகர், விநாயகர்கோவில் வீதி, அம்மன் கோவில் வீதி, கச்சேரிவலசு உள்பட 50க்கும் மேற்பட இடங்களில் வாக்கு சேகரித்தார். இதில் கிராமப்புற பெண்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடித்தல் மண்பானைகள் செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த சிறிய தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு வட்டியில்லா கடனாக 50 ஆயிரம் வழங்கப்படும். நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை உயர்வு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு புதிய கட்டண விகிதங்கள் விதிக்கப்படும்.

கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கோவில்களின் நிதியிலிருந்து வழங்கப்படும் ஓய்வூதியம் ஐந்தாயிரம் ரூபாய் என்பதை உயர்த்தி வழங்குவது பொங்கல் போனஸ் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அதிக அளவில் நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும். சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு தொடங்கப்படும்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். பேரூராட்சி, நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்த 15 நாளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் உள்ளதை எடுத்துக்கூறி, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என பேசினார். இதில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>