×

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் 60 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன

ஊட்டி, மார்ச் 29: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதனிடையே பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்திடும் வகையில் 3 தொகுதிகளிலும் தலா பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்களும், வீடிேயா கண்காணிப்பு குழுக்கள், கணக்கு குழு அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இக்குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.இதனால் வாகன ேசாதனை, கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.. கடந்த வாரத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதன்படி 3 தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படை என 27 குழுக்களும், தலா 7 நிலை கண்காணிப்பு குழு என 21 குழுக்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை தொகுதிக்கு தலா 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 60 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : Nilgiris ,
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...