குன்னூர் திமுக வேட்பாளர் ராமசந்திரன் சேலாஸ் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊட்டி,மார்ச்29: குன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேலாஸ், கரும்பாலம் மற்றும் பாரதி நகர் நகர் பகுதிகளில் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் வாக்கு சேகரித்தார். குன்னூர் சட்டமன்ற தொகுதி திமுக., வேட்பாளர் ராமசந்திரன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட கரும்பாலம், சின்ன கரும்பாலம், காட்டேரி, சேலாஸ், மேல்பாரதி நகர், கீழ்பாரதி நகர், கிளண்டேல், சோல்ராக், உலிக்கல், கிளிஞ்சாடா, பில்லூர்மட்டம், முத்தநாடு, உலிக்கல், ஆர்செடின், நான்சச், பக்காசூரன்மலை, ஸ்டேன்லிபார்க், அம்பிகாபுரம், உபதலை, பெரிய உபதலை, பழத்தோட்டம், கேட்டில் பவுண்ட் போன்ற பகுதிகளில் நேற்று திமுக., வேட்பாளர் ராமசந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக சென்றும், கிராமங்கள் தோறும் சென்று மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அனைத்து பகுதிகளிலும், அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர்கள், தொழிலாளர் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பயிர் கடன் உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மகளிருக்கு வட்டியில்லா கடன் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்யப்படும், என திமுக தேர்தல் அறிக்கையை  கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  

பிரசாரத்தின் போது, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெள்ளி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜே.பி.சுப்பிரமணியம், ஆதிதிராவிடர் நலக்குழு சின்னான், திமுக., நிர்வாகிகள் சுந்தரம், செல்வராஜ், ஆன்ட்ரூஸ், மகாலிங்கம், பெர்னான்டஸ், மார்டின், கிருஷ்ணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மீனா,லட்சுமி,ராதா உட்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories:

>