×

பங்குனி உத்திர விழாவில் மிளகாய் கரைசல் அபிஷேகம் கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்டு வடை சுட்டு பக்தர் நேர்த்திக்கடன்

விழுப்புரம், மார்ச் 29: கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்டு வடை சுட்டு பக்தர் நேர்த்திக் கடன் செலுத்தினார். விழுப்புரம் மாவட்டம் பில்லூர் மதுரா பிள்ளையார்குப்பம் கிராமத்தில் நேற்று 37ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் கோயில்களில் முருகப்பெருமானுக்கு உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் பத்து நாட்களுக்கு முன்பே காப்பு கட்டி முருகப்பெருமானுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று பில்லூர் மதுரா பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் பொதுமக்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுட்டு எடுத்தும், தலையில் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கற்பூரம், மிளகாய் கரைசல் அபிஷேகம் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Panguni Uttara ceremony ,
× RELATED பங்குனி உத்திர விழாவில் மிளகாய்...