காரிமங்கலம் அருகே உயர் கோபுர மின் விளக்கு சீரமைப்பு

காரிமங்கலம், மார்ச் 29: கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில், மாட்லாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், குப்பாங்கரை பிரிவு சாலை பகுதியில், முன்னாள் திமுக எம்.பி.தாமரைச்செல்வன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ₹5 லட்சம் மதிப்பில் உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த மின்விளக்கு எரியாததால், இப்பகுதி இருள் சூழ்ந்து அவ்வழியே செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பிடிஓக்கள் ராமஜெயம், மணிவண்ணன் ஆகியோர், பழுதடைந்த உயர்மின் கோபுர விளக்கை சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories:

>