பங்குனி பொங்கல் திருவிழா தொடக்கம்

சிவகாசி, மார்ச் 29: சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயில் 46வது பங்குனி பொங்கல் திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.  11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் , இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு அலங்காரத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories:

>