காரைக்குடியில் ஜவ்வாக இழுக்கும் பாதாள சாக்கடை பணி முடிக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உறுதி

காரைக்குடி, மார்ச் 29: காரைக்குடியில் பாதாள சாக்கடை பணி விரைவில் முடிக்கப்பட்டு சாலை அமைக்கப்படும் என, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உறுதியளித்தார். காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, காரைக்குடி பொருமாள் கோவில், செஞ்சை, வைத்தியலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் நடுத்தர, அடிமட்ட மக்களின் தேவைகள், பிரச்சனைகள் குறித்து நன்கு உணர்ந்தவன் என்பதால் சாதாரண, கடைக்கோடி மக்களுக்காக பணிசெய்வேன்.  என்னை எந்த நேரமானாலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.  கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சியை ஒட்டிய பகுதியான சங்கராபுரம் ஊராட்சி தலைவராக சிறப்பாக மக்கள் பணியாற்றி உள்ளேன். மக்களின் பிரச்சனைகளை தீப்பதே எனது முதல் கடமையாக இருக்கும்.

பாதாளசாக்கடை திட்டம் நீண்டநாட்களாக நடப்பதால் மக்கள் பெரிதும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்பணி உடனடியாக முடிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் சாலை அமைக்கப்படும்’’ என்றார். திமுக நகர செயலாளர் குணசேகரன், துணை செயலாளர் கண்ணன்,  காங்கிரஸ் நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், திமுக முன்னாள் கவுன்சிலர்கள் சன்சுப்பையா, அன்பழகன், பழனி, சொக்கலிங்கம், சோமுபிள்ளை, திமுக நிர்வாகி சுப்பிரமணி, பிரசன்னா, ஜெபதுரை,  பொய்யலூர்சரவணன், காங்கிரஸ் நிர்வாகிகள் குமரேசன், சேவியர், நெல்லியான், ஆண்டவர்பழனியப்பன், பாலா, மணி, விவேக், மதிமுக மாநில நிர்வாகி பசும்பொன்மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>