×

அம்மன் சப்பர வீதி உலா

சிங்கம்புணரி, மார்ச் 29: சிங்கம்புணரி  அருகே ஏரியூரில் உள்ள மலை மருந்தீஸ்வரர் சமேத பர்வத வர்த்தினி  அம்மன் முனிநாதன் கோயில் பங்குனி உத்திர  திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு  மலை மருந்தீஸ்வரர் சமேத பர்வத வர்த்தினி அம்மன்  விநாயகர், முருகன் வள்ளி  தெய்வானையுடன் சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏரியூர் மற்றும் சுற்று கிராமங்களைச்  சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags : Amman Sappara Road ,
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...