பரமக்குடி தொகுதியில் ஏழை, எளிய மக்கள் பகுதிகளில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

பரமக்குடி, மார்ச் 29: பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் எம்எல்ஏ பரமக்குடி நகர் பகுதிகளான 24, 25 வார்டுகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அந்த பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பளித்தனர். இதில் நகர செயலாளர் கணேசன், வார்டு செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் சுப்பையா, காட்டுபரமக்குடி முருகேசன், மகளிரணி திலகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, கமுதி வடக்கு ஒன்றியம் டி.புனவாசல் உள்ளிட்ட 30 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கூடலாஊரணி, பூலாங்கால், காடக்குளம், எழுவனூர் கிராமங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 300 பேர் சதன் பிரபாகர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், ‘‘பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏழை எளிய மக்கள் வாழக்கூடிய பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுகாதார வசதிகள் செய்து கொடுப்பேன்’’ என வாக்குறுதி அளித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முத்தையா, பரமக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ராஜேந்திரன், பரமக்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் துரை ராமநாதன், பரமக்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இந்திரன், மத்திய சங்க துணைச் செயலாளர் சிங்கார பூபதி, பரமக்குடி கிளை நிர்வாகி நாகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>