×

ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திருப்புல்லாணி வட்டாரத்தில் இன்று பிரசாரம் செய்யவுள்ளார். ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார். இவர் செல்லும் இடங்களில் மக்கள் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர். திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தினைக்குளம் பள்ளிவாசல், கட்டயன்பேரன் வளைவு, மொங்கான் வலசை, கோரைக் கூட்டம், காஞ்சிரங்குடி பள்ளிவாசல், கிருஷ்ணாபுரம், மேலவலசை, செங்கல் நீரோடை, சிவகாமிபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை வாக்கு சேகரிக்கிறார். பால் கரை, அச்சடிபிரம்பு, கோவிந்தனேந்தல், ஆர்எஸ் மடை (கண்மாய்) பகுதிகளில் மாலை 4.30 மணி வரை பிரசாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து பெரியார் நகர், மூலக்கொத்தலம், அக்ரஹாரம் தெரு, சிவன் கோயில், திரவுபதி அம்மன் கோயில், ஈசா பள்ளிவாசல் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, தங்கப்பா நகர், வெற்றிலை கார தெரு, தீன் பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

Tags : Ramanathapuram ,DMK ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...