×

ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வாக்குறுதி

சாயல்குடி, மார்ச் 29: பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி வாக்குறுதியளித்தார். முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி நேற்று சாயல்குடி ஒன்றியத்திலுள்ள கடற்கரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். நரிப்பையூர், வேலாயுதபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இப்பகுதி மக்களின் முக்கிய உற்பத்தி பொருளான பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நேரடியாக கொள்முதல் செய்யப்படும். பனைமர தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி, காப்பீடு, பெண்களுக்கு பனை பொருள் உற்பத்தி பயிற்சி மையம் ஏற்பாடு செய்யப்படும்.

நரிப்பையூர் 5 ஏக்கர் கடற்கரை பகுதி சுற்றுலாதலம் போன்று தரம் உயத்தப்படும். மூக்கையூர் துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படும். வாலிநோக்கத்தில் மீண்டும் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய், டீசல் மானியம், ஆழ்கடல் மீன்பிடி சாதனங்கள், விசை படகு வாங்க மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். பிரச்சாரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கடலாடி முனியசாமி பாண்டியன், சாயல்குடி அந்தோணிராஜ், மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவீன்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Mudukulathur ,AIADMK ,Keerthika Muniyasamy ,
× RELATED முதுகுளத்தூர்- அபிராமம் சாலை...