ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச குடிநீர் இணைப்பு அர.சக்கரபாணி எம்எல்ஏ பேச்சு

ஒட்டன்சத்திரம், மார்ச் 29: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம், கோரிக்கடவு, நாச்சியப்பகவுண்டன்வலசு, கோவிலம்மாபட்டி, எட்டமநாயக்கனூர், கொழுமம்கொண்டான், போதுபட்டி, சந்தன்செட்டிவலசு, பணம்பட்டி, ராஜாம்பட்டி, மேல்கரைப்பட்டி மானுர், நெசவாளர் காலனி ,அக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அர.சக்கரபாணி வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரம் பிர்க்காவில் உள்ள 8 குறுவட்டங்களில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனவிலங்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க தர்மத்துப்பட்டியிலிருந்து பழனி வரை அகழிகள் அமைக்கப்படும். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படும், பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும், தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பரம்பிக்குளம் - ஆழியாற்றிலிருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>