பட்டிவீரன்பட்டி பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா

பட்டிவீரன்பட்டி, மார்ச் 29: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளிதெய்வாணை சமேத முருகன், அய்யம்பாளையத்தில் மலைமேல் காந்தி குன்றில் அமைந்துள்ள அருள்முருகன் போன்ற கோயில்களில் பங்குனி நேற்று திருவிழா நடைபெற்றது. அய்யம்பாளையத்தில் காந்திகுன்றில் மலைமேல் உள்ள அருள்முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், திருநீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி முருகனை வழிபட்டனர். இதேபோல் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வாணை சமேத முருகனுக்கும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் 97ம் ஆண்டு பங்குனி உத்திரதிருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம், காவடிகள், பாலபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>