அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கிராமங்களுக்கு இரவு நேர பஸ் வசதி: அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேச்சு

மதுராந்தகம், மார்ச் 29: அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் உறுதியளித்தார். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அடையாளம், சிறுபேர்பாண்டி, மின்னல் சித்தாமூர், மின்னல்,  கீழ்மின்னல், கீழ்ப்பட்டு, புறங்கால், அண்ணங்கால், கூனங்கரனை, ராஜபாளையம், பொற்பனங்கரணை, பாபுராயன்பேட்டை, கலியகுணம், எலப்பாக்கம், அல்லானூர், பூண்டி, காட்டுக்கரணை, மதூர், மேல்நத்தம், கோட்டகயப்பாக்கம், விளாங்காடு, திம்மாபுரம், திருமுக்காடு, கொத்தமங்கலம், சீதாப்புரம் உள்பட பல கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசுகையில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதி, முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள மதுராந்தகம் மற்றும் திண்டிவனம் நகரங்களுக்கு இப்பகுதி மக்கள், தினமும் தங்களது அன்றாட தேவைகளுக்காக சென்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான நேரங்களில் பஸ் வசதி சீராக இல்லை. எனவே, அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய நகரங்களுக்கு இரவு நேரங்களிலும் சென்று வர ஏதுவாக பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தார்.

 அப்போது, அவருடன் அதிமுக மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அனந்தமங்கலம்  சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், நிர்வாகி  ராமமூர்த்தி, பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் மின்னல்  மூர்த்தி, ராமலிங்கம், சீனு, ஆறுமுகம், ரவிச்சந்திரன், முத்துகுமார்,  வெங்கடேசன், தமாக அச்சிறுப்பாக்கம் வட்டார தலைவர் சங்கர், நிர்வாகிகள்  யுவராஜ், புண்ணியமூர்த்தி, கார்த்திக், டில்லிபாபு, ரங்கராஜன், லோகம்மாள்,  மகேஸ்வரன், அர்ஜுனன், ஆறுமுகம், மணிகண்டன் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமான உடனிருந்தனர்.

Related Stories:

>