×

மாட்டு வண்டியில் பாமக வேட்பாளர் பிரசாரம்

திருப்போரூர், மார்ச் 29: திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்து  மாட்டு வண்டியில் பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், கூட்டணி கட்சியினருடன் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆலத்தூர், வெங்கலேரி, தண்டலம், மடையத்தூர், செம்பாக்கம், அச்சரப்பாக்கம், மயிலை, எடர்குன்றம், கொட்டமேடு, கீழூர், தர்மாபுரி, நெல்லிக்குப்பம், அம்மாப்பேட்டை, கொண்டங்கி, மேலையூர், நந்தம்பாக்கம், மாங்கொல்லை, வெங்கூர், சிறுங்குன்றம், அனுமந்தபுரம், பெருந்தண்டலம், முள்ளிப்பாக்கம், பூண்டி, இராயமங்கலம், கரும்பாக்கம், பூயிலுப்பை, பெரிய இரும்பேடு, சின்ன இரும்பேடு, தண்டரை, ஒரத்தூர், பெரிய விப்பேடு, சின்ன விப்பேடு, ஒரகடம், திருநிலை, அருங்குன்றம் ஆகிய கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின்போது தண்டலம் ஊராட்சியில், அவர் மாட்டு வண்டியில் நின்றபடி வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது, மானாம்பதியில் இருந்து பெரிய விப்பேடு, சின்ன விப்பேடு, கழனிப்பாக்கம், ஒரகடம் வழியாக செங்கல்பட்டு நகர பஸ் இயக்கப்படும். கரும்பாக்கத்தில் இருந்து அடையாறு வரை இயங்கும் மாநகர பஸ் கோயம்பேடு வரை நீட்டித்து இயக்கப்படும், திருப்போரூரில் இருந்து செம்பாக்கம், கொட்டமேடு, கீழூர், தர்மாபுரி, நெல்லிக்குப்பம் வழியாக தாம்பரம் வரை மாநகர பஸ் இயக்கப்படும், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடப்பட்ட அரசு சுகாதார நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

அவருடன் பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தையூர் எஸ்.குமரவேல், நந்தகுமார், நகர செயலாளர் முத்து, நகர நிர்வாகிகள் சிவராமன், சேகர், லவன், விஜயன், பாமக மாநில துணை அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், மாவட்ட துணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, காயார் ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் அருண்குமார், கங்காதரன், ரோஹித், கோதண்டன், வழக்கறிஞர் செல்வராஜ், புரட்சி பாரதம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Pamaka ,
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்