×

மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன்: திமுக வேட்பாளர் ஆவடி நாசர் வாக்குறுதி

ஆவடி, மார்ச் 29: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர் வாக்குறுதி அளித்தார்.
 ஆவடி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 1,2,48 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும், சிறுவர்-சிறுமியர் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். மேலும், அவருக்கு ஆவடி மேற்கு நகர செயலாளர் பொன் விஜயன் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

அப்போது பொதுமக்களிடம் வேட்பாளர் ஆவடி நாசர் பேசியதாவது:- முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன். பல இடங்களில் எரியாமல் கிடக்கும் விளக்குகளை சீரமைப்பேன். சேதமடைந்த கிடக்கும் தார் சாலைகள் அனைத்தையும் செப்பனிடுவேன். மேலும், மாணவர் உயர்கல்விக்காக நூலகம் அமைத்து கொடுப்பேன். நவீன உடற்பயிற்சி மையங்களை அமைப்பேன். இதோடு மட்டுமல்லாமல், மிட்டனமல்லி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்துவேன். மேலும், இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீனப்படுத்துவேன். கண்டிகை பகுதியில் சுகாதார மையம் அமைப்பேன். மிட்டினமல்லி ஏரி கரையில் சாலை அமைத்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்வேன். கண்டிகை, மிட்டனமல்லி பகுதியில் மினி பேருந்து வசதி செய்து கொடுப்பேன். ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவேன். எனவே நீங்கள் எனக்கு ”உதயசூரியன்” சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும், தேர்தல் பிரசாரத்தில், திமுக மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் அந்தரிதாஸ், மாநகர காங்கிரஸ் தலைவர்கள் இ.யுவராஜ், ஏ.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், மதிமுக மாநகரச்செயலாளர் எஸ்.சூரியகுமார், விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் மு.ஆதவன்,  நகர செயலாளர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மயில்வாகனன், அரி, பூபாலன், ராஜன், ஆவடி மேற்கு நகர திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சௌந்தர், கலை சேகர், வக்கீல் சேகர், போட்டோ தரணி, பவானி வரதன், வட்டச்செயலாளர் மீன் பழனி, தாஸ், முரளி, சிவகுமார், கருணாகரன், ஜோன்ஸ், பதி, அண்ணாமலை, கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோ, வாணிஸ்ரீ, மற்றும் ஆறுமுகம் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mittanamalli ,Muthappudupet ,DMK ,Avadi Nasser ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...