×

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி தொடங்கப்படும்: திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி வாக்குறுதி

திருவள்ளூர், மார்ச் 29: பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி பூந்தமல்லி நகராட்சியில் 11 வது வார்டு முதல் 21 வது வார்டு வரை திமுக நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் தலைமையில் வீதி, வீதியாக சென்று  உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்பொழுது பெண்கள் வீட்டின் முன்பு கோலமாவில் உதயசூரியன் சின்னத்தை வரைந்தும், திமுக வெற்றி என வரைந்தும், ஆரத்தி எடுத்தும், சூரத்தேங்காய், திரஷ்டி பூசணிக்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் பேசும்போது, பூந்தமல்லி நகராட்சியின்  எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 50 மின் கம்பங்கள் நிறுவப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேல்மா நகர் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டிலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தந்துள்ளேன். மீண்டும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வைத்ததும், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பூந்தமல்லி நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டப்பணி உடனே தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

16 வது வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் தலைமையில் வட்ட செயலாளர் எஸ்.கமலாகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.அசோக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி பூந்தமல்லி நகரத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை கண்டிப்பாக கொண்டு வருவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டு 2 வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக மாவட்ட துணை செயலாளர் காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.திருமலை, மதிமுக நிர்வாகிகள் அட்கோ மணி, சங்கர், கம்யூனிஸ்ட் பாரி, விசிக நகர செயலாளர் நரேஷ், முஸ்லிம்லீக் நிர்வாகி பிஸ்மி பாய், தமமுக மாவட்ட நிர்வாகி சேக்தாவூத் கருஞ்சிறுத்தை அமைப்பின் நிர்வாகி பிரபுதாஸ், திமுக நகர நிர்வாகிகள் சு.அன்பழகன், இ.பழனி, பிஆர்பி.அப்பர்ஸ்டாலின், டில்லிராணி மலர்மண்ணன், பி.சௌந்தர்ராஜன், இரா.புண்ணியக்கோட்டி, க.ஏழுமலை, ஜெ.சுதாகர், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் தாஜிதின்,சங்கரலிங்கம், எஸ்.அசோக்குமார், துரைபாஸ்கர், நிர்மல்குமார், எக்ஸ்.சந்தோஷ்குமார், நகர இளைஞரணி நிர்வாகிகள் ஜெ.அமிதாப், வடிவேலன், சபிக் அகமது, க.சரவணன், ஆனந்தன், டான்போஸ்கோ, நகர மாணவரணி நிர்வாகிகள் சுரேந்தர், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : Poonamallee ,MK ,Stalin ,Tamil ,Nadu ,Chief Minister ,DMK ,A. Krishnasamy ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...