திருவள்ளூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.தாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர், மார்ச் 29: பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.தாஸ் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட காரணி நிசாம்பட்டில்  தொடங்கி இராமஞ்சேரி, தோமூர், குன்னவலம், நாராயணபுரம், பட்டரைபெரும்புதூர், நெமிலியகரம், பாண்டூர், கைவண்டூர், சிறுவானூர் மற்றும் திருப்பாச்சூர் வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  அவருக்கு பொதுமக்கள் மேளதாளம் பேண்டு வாத்தியம் முழங்க வாணவேடிக்கை ஊர்வலமாக அழைத்துச் சென்று ஆர்த்தி எடுத்து  அமோக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர், அப்போது பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.தாஸ் பேசும்போது, பாபா சாகேப் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறை படுத்துவதே பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே இலக்கு என்றும், இந்திய அரசியலமைப்பு  சட்டத்தை நடைமுறை படுத்தினாலே வறுமை ஒழிந்திவிடும். தேர்தல் என்பது அதிகாரத்தை தனிநபரிடத்தில் கொண்டுபோய் குவிப்பதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக, அனைத்து மக்களுக்கும் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்தவே நடத்தப்படுவதாகவும். நாட்டில் சமூகப் புனரமைப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி இந்த 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.

எனவே நீங்கள் அனைவரும் எனக்கு யானைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். எனக்கு யானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைத்தால் கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவேன் என்றார். திருவள்ளூர் தொகுதி தலைவர் வழக்கறிஞர் சேலை எஸ்.சுரேஷ், தொகுதி பொதுசெயலாளர் பொன்னரசு, தொகுதி பொருபாளர்கள் காமராஜ், பாலா, மணிகண்டன், மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம், மாவட்ட மாணவரணி தலைவர்  புல்லரம்பாக்கம் கவி, மாவட்ட  பொறுப்பாளர்கள் வெற்றிவேந்தன், லோகேஷ், வழக்கறிஞர் சேலை ராஜேஷ், பூண்டி ஒன்றிய தலைவர் கிரி, ஒன்றிய செயலாளர் பார்த்திபன், ஒன்றிய பொருளாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் வினோத், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஜானி, ஒன்றிய  பொறுப்பாளர்கள் ஸ்ரீதர், ஹென்றி, அஜித்குமார், சேலை பொன்ராஜ், சேலை வேல்ராஜ் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: