ஜான் பாண்டியனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தண்டையார்பேட்டை: எழும்பூர் தொகுதி வேட்பாளரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவருமான ஜான் பாண்டியனை எடப்பாடி பழனிசாமி ஆதரித்து நேற்று இரவு  எழும்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ஏற்கனவே எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மீண்டும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை அவரை வெற்றிபெற செய்யுங்கள். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம். இந்தியாவிலேயே அமைதி மாநிலமாக தமிழகம் உள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு வந்து கொடுக்கப்படும். 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். ஆட்டோ வாங்க மானியம் 25 ஆயிரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கப்படும். இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும். மீனவர்களுக்கு மீன் பிடி தடைகாலங்களில் வழங்கப்படும் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். இன்னும் பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளோம். எனவே, நீங்கள் ஜான்பாண்டியனை அதிக வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்,” என்று பேசினார்.

Related Stories:

>