×

எங்கள் வாக்கு உங்களுக்கு தான்: மா.சுப்பிரமணியனுக்கு இளைஞர்கள் வரவேற்பு

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று 171வது வார்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டோர், தாடண்டர்நகர் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் வாக்குச்சேகரித்தார். கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக அனைத்து வார்டுகளிலும் புதியதாக உடற்பயிற்சிக்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கருவிகள் வாங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதை மறவாத சைதை தொகுதி இளைஞர்கள் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுடன் செல்பி எடுத்தனர். மேலும், இளைஞர்களின் வாக்குகள் அனைத்தும் உங்களுக்குத்தான் என வாக்குறுதியளித்தனர்.

இதையடுத்து, நேற்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை 171 அ வட்டத்தில் நந்தி சிலையில் தொடங்கி, ரயில்வே பார்டர் 2வது தெரு, மருத்துவமனை சாலை, சுப்புபிள்ளை தோட்டம் குடிசை பகுதி, காந்திபுரம் 3, 2, கோயில் 1வது தெருவில் நடந்தேச்சென்று வாக்குச் சேகரித்தார். இதில் திமுக பகுதிச்செயலாளர் துரைராஜ், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சைதை சம்பத், சைதை மா.அன்பரசன், பகுதி அவைத் தலைவர் மின்னல் கந்தப்பன், பகுதி கழக நிர்வாகிகள் இ.முருகேசன், மேகலாஜெயவேல், வட்டச்செயலாளர் மு.ராஜா மற்றும் என்.நந்தகோபால், எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.மஜித், ஆ.வரதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Ma Subramaniam ,
× RELATED தமிழ்நாட்டில் 38 மாவட்டத்திலும்...