×

முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராசுவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரசாரம்

முசிறி, மார்ச் 26:  முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளராக செல்வராசு எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் முசிறி தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் செல்வராசுக்கு ஆதரவாக திரைப்பட நடிகை விந்தியா பிரசாரம் செய்து பேசியதாவது: அதிமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ள அனைத்தும் பெற நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய சின்னம் இரட்டை இலை சின்னம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முசிறி தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராசுவை மீண்டும் நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்காகவும், உங்கள் பகுதியின் வளர்ச்சிக்காகவும் மீண்டும் பாடுபடுவார் என்றார். மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, முன்னாள் எம்எல்ஏக்கள் பிரின்ஸ் தங்கவேல், ரத்தினவேல், மல்லிகா, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் சுப்பிரமணியன் உடனிருந்தனர்.

Tags : Actress ,Vindhya ,AIADMK ,Selvarasu ,Musiri Assembly ,
× RELATED பொய் வாக்குறுதி தரும் பாஜவையும்...