×

திருச்சி மாவட்டத்தில் 23.38 லட்சம் வாக்காளர்கள் புதிதாக 5,859 பேர் சேர்ப்பு

திருச்சி, மார்ச் 26: திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி முதல் நடந்து இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து தொடர் திருத்தங்கள் கடந்த 9ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. தொடர் திருத்த பணிகளின்போது பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 19ம் தேதி துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த ஜனவரி 20 முதல் மார்ச் 9ம் தேதி வரை நடந்த தொடர் திருத்தங்களின்போது நேரடியாகவும், இணையதள வாயிலாகவும் 13,812 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 2,701 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட முதன்மை மற்றும் துணை வாக்காளர் பட்டியலின்படி சட்டமன்ற தொகுதி வாரியாக இறுதி வாக்காளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மணப்பாறை தொகுதியில் ஆண்கள் 1,41,744, பெண்கள் 1,47,758, மூன்றாம் பாலினம்    10 என மொத்தம் 2,89,512 வாக்காளர்கள் உள்ளனர். ரங்கம் தொகுதியில் ஆண்கள்1,50,363, பெண்கள் 1,61,093, மூன்றாம் பாலினம் 28 என மொத்தம் 3,11,484 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் ஆண்கள் 1,29,764, பெண்கள் 1,39,351, மூன்றாம் பாலினம் 17 என மொத்தம் 2,69,132 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் ஆண்கள் 1,23,798, பெண்கள் 1,31,150, மூன்றாம் பாலினம்44 என மொத்தம் 2,54,992 வாக்காளர்கள் உள்ளனர். திருவெறும்பூர் தொகுதியில் ஆண்கள் 1,43,784, பெண்கள் 1,49,163, மூன்றாம் பாலினம் 56 என மொத்தம்    2,93,003 வாக்காளர்கள் உள்ளனர்.
லால்குடி தொகுதியில் ஆண்கள் 1,05,451, பெண்கள் 1,12,371, மூன்றாம் பாலினம் 15 என மொத்தம் 2,17,837    வாக்காளர்கள் உள்ளனர். மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஆண்கள் 1,17,994, பெண்கள் 1,26,018, மூன்றாம் பாலினம் 31 என மொத்தம் 2,44,043 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி தொகுதியில் ஆண்கள் 1,13,467, பெண்கள் 1,19,166, மூன்றாம் பாலினம்21 என மொத்தம் 2,32,654 வாக்காளர்கள் உள்ளனர். துறையூர் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,09,415, பெண்கள் 1,16,658, மூன்றாம் பாலினம் 15 என மொத்தம் 2,26,088 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 11,35,780, பெண்கள் 12,02,728, மூன்றாம் பாலினம்    237 என மொத்தம் 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி கூடுதலாக 5,859 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Trichy district ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு